உங்கள் கவனத்திற்கு!


Photobucket

இயேசு கிறிஸ்துவில் அன்பானவர்களே,
வலது புறம் தெரியும் 32 பாடல்கள் அடங்கிய பட்டியலில்,
நீங்கள் கேட்க விரும்பும் பாடலின் மேல் கிளிக் செய்யவும்.cloudmesa

5/8/10

கீர்த்தனை இன்பம் துய்க்க வாரீர் - பகுதி- 03

அழகுமிகு அங்கமாலை


தமிழ்யாப்பிலக்கணம் கூறும் பா வகைகள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, சிந்து,
அந்தாதி, அங்கமாலை போன்ற பாக்களின் ஓசை நயம் மிகவும் சிறப்புடையதாகும்.

அங்கமாலை என்பது உடலின் அங்கங்களை வர்ணித்துபாடுவது. இவ்வகை அங்கமாலை
கடவுளைப் புகழ்ந்தும் தலைவன், தலைவியின் வீரம் அல்லது அழகு பற்றி வர்ணித்து பாடுவது அங்கமாலை ஆகும்.

அங்கமாலைக்கென்று ஒரு தனி இலக்கணம் உண்டு.

கடவுளைபற்றி பாடுகிற போது "கேசாதி பாதம்" என்ற முறையில் இருக்க வேண்டும். அதாவது கடவுளை புகழ்ந்து பாடுகிறபோது தலையில் இருந்து அங்கமாகப்பாடி இறுதியில் பாதத்தில் முடித்து அவரது பாதம் சரணடைவது போன்று முடிக்க வேண்டும்.

தலைவன்; தலைவியை பற்றி பாடுகிறபோது "பாதாதி கேசம்" பாட வேண்டும். அதாவது
பாத அழகில் ஆரம்பித்து இறுதியில் கேசத்தின் அழகைபற்றி பாடி முடிக்க வேண்டும்.

நமக்கு கிடைத்திருக்கும் ஒரே அங்கமாலை ஜீ.சே. வேதநாயகம் ஐயர் அவர்கள் பாடியதாகும்.

(1868-1932) இவர் மதுரையில் அமெரிக்க மிஷனில் பணிபுரிந்தவர்.

மதுரை அமலகுருசதகம்,
சற்குருசதகம்,
நித்யானந்த காதல்,
போன்ற நூல்களை எழுதியவர்.

"பரலோக ராஜியப்பாமாலை"
என்ற தலைப்பில் இசைபாடல்களையும் எழுதினர்.

சென்னையில் இவரது ஊழியம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அக்காலக்கட்டத்தில் வில் வண்டி வைத்திருந்த போதகர் என்று இவரைப்பற்றி கூறுவார்கள். இத் தகவலை இவரது "உந்தன் திருப்பணியை உறுதியுடன் புரிய உதவாத பாவி நானே" என்ற கீர்த்தனையில் காணலாம்.

இவர் எழுதிய அங்கமாலையில் பல சிறப்புக்களை நாம் காணலாம்
.
"பணியாயோ சிரசே படியோர் பாவமே சுமந்து
அணியா முன்முடி பூண்டசிரசினை - பணியாயோ"
நெற்றியே நிமிராய்..........
கேண்மீன்னோ செவிகாள்..........
காணீரோ விழிகாள்..........
உதடே முத்தி செய்யாய்..........
துதியாயோ நாவே..........
கண்டமே நீ பாடாய்..........
நெஞ்சமே நீ அணையாய்..........
செவிப்பீர் செங்கரங்காள்..........
கால்காள் ஒடுங்களே..........
பாதங்களே நடமின்..........

என்று சிரத்தில் ஆரம்பித்து பாதங்களில் முடியும் ஓர் அற்புதமான கீர்த்தனையாகும்.

இது செஞ்சுருட்டி இராகத்தில் இருந்தாலும் திருச்சபைகளில் சங்கராபரணம் இராகத்தில் பாடப்
படுகிறது.

இக் கீர்த்தனையில் இன்னும் ஒரு சிறப்பு கர்ப்பிணிப் பெண்கள் பாடுவதற்கு மிகவும்
உகந்த பாடல். தொட்டில் பிள்ளையை வைத்து தாலாட்டுவதற்கும் இது மிகவும் பொருத்தமானது.

நீலாம்புரி இராகம் போன்று, கேட்கும் குழந்தைகள் உடனே தூங்கிவிடும்.

என் மகள் நிறைமாத கர்ப்பமாய் இருந்த போது இக்கீர்த்தனையைப் பாடியதால்,
என் பேரனுக்கு இப்போதும் தூங்குவதற்கு அந்த பாடல்தான் பாடவேண்டும்.

ஆண்டவர்தாமே பெண்களுக்கு இந்த அருமையான கீர்த்தனைமேல் பற்றுகொள்ளச் செய்வாராக. ஆமென்.
(தொடரும்).

கௌரவ உதவிகுரு. அருள்திரு. S.S.P.M ஹரன்
TELC கூடல் நகர், மதுரை - 625018.
Cell:9842194671

1 comment:

  1. DEAR REVEREND,
    I HAVE SEEN THE SONGS IN THE WEB SITE.IT WAS VERY VERY USEFUL ME TO SING THE SONGS IN OUR CHURCH.MY SUGGESTION IS THERE IS A LOT OF UNKNOWN SONGS IN KEERTHANAI & ALSO IN PAAMALAI.SO I WANT TO LEARN AND TEACH IN YOUTH CHOIR.
    I VERY MUCH THANKS TO ALL AND WORK IN THIS SITE,GIVEN ME THE OPPORTUNITY HEAR THE SONGS WHICH I WAS DONOT KHOW THE RAGAS.
    THANKS&REGARDS,
    RAJAKUMAR.I
    St.Mathews Church.CSI
    KOLAR GOLD FIELDS.
    cell-9740169427
    mail id-rajakumarkgfrk@gmail.com

    ReplyDelete

தயை செய்து பாடல் பற்றின உங்கள் கருத்துக்களை கீழே ஓரிரு வார்த்தைகளிலாவது...
பதிவு செய்யுங்கள். (அ)
98421 94671 என்ற அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு சொல்லுங்கள்.
(அ)
உங்கள் தொலைபேசி எண்ணையோ, முழு முகவரியையோ இட்டுச் செல்லுங்கள்.
நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

அன்புடன்
அருள்திரு. S. S. P. M. ஹரன்

ஒத்த இராகத்தில் அமைந்த கிறிஸ்தவக் கீர்த்தனைகளின் பட்டியல்

1) சங்கராபரணம்
திரிமுதல் கிருபாசனனே
சீர்மிகு வான்புவி தேவா

சங்கராபரணம்
குணப்படு பாவி தேவ
பாக்கியர் இன்னார்
கர்த்தரின் பந்தியில் வா

சங்கராபரணம்
ஆர் இவர் ஆராரோ
சுபஜெய மங்களமே
தோத்திரப் பாத்திரனே
ஐயரே நீர் தங்கும்
அனுக்கிர வார்த்தையோடே
வாரும் பெத்லகேம் வாரும்

சங்கராபரணம்
குருசினில் தொங்கிய
திருமுகந்தெளிவற்று
வானமும், பூமியும்

சங்கராபரணம்
சத்தாய் நிஷ்களமாய்
தந்தையே இவர்க்கு மன்னி

சங்கராபரணம்
சுந்தரப் பரமதேவ
பூமியின் குடிகளே

2) ஹரி காம்போதி
ஒகோ பாவத்தினை
மகனே உன் நெஞ்சே
பரனே திருகடைக்கண் பாராயோ

ஹரி காம்போதி
இயேசுவின் நாமமே
சத்திய வேதத்தை
தேவ பிதா எந்தன் மேய்
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவர்

3) பியாகு
கண்களை ஏறெடுப்பேன்

பியாகு
கிஞ்சிதமும் நெஞ்சே
ஆத்தும ஆதாயம்
ஆண்டவர் பங்காகவே

பியாகு
வீராதி வீரர் இயேசு
யூதராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

பியாகு
எழுந்தார் இறைவன்
இவரே பெருமாள்

4) பியாக்
ஜெகநாதா குரு பரநாதா
வாரீரோ வினை திரீரோ
என் மீட்பர் உயிரோ

5) ஆனந்த பைரவி
இயேசு நாமம் ஒன்றை
பாதகன் என் வினை தீர் ஐயா
தேவனே நான் உமதண்டையில்
நம்பினேன் உனதடிமை நானய்யா
புத்தியாய் நடந்து வாருங்கள்
பரத்திலே நன்மை வருகுமே
சிந்தை செய்யும் என்னில்
இந்த மங்களம் செழிக்கவே
இன்னமும் நாம் இயேசு
அந்தகார பூமி இதையா

ஆனந்த பைரவி
ஆத்துமமே என் முழு உள்ளமே
மணவாழ்வு புது

ஆனந்த பைரவி
வாரும் பாரும் அய்யா
இம்மட்டும் ஜீவன் தந்த

6) பூரி கல்யாணி
சீர்திரி ஏகவஸ்தே நமோ
மகிழ்மகிழ் மந்தை நீ அல்லே

7) காம்போதி
பாடித்துதி மனமே
கிறிஸ்தவ இல்லறமே

காம்போதி
இயேசு கிருபாசன பதியே
வான நகரத்தின் மேன்மை
ஞானஸ்நானமா ஞானதிரவியமே

8) நாத நாமக்கிரியை
ஏங்குதே என்னகந்தான் - துயர்
பாவி நான் என்ன செய்வேன்

நாத நாமக்கிரியை
இயேசு நான் நிற்கும்
ஜெப சிந்தனை எனில் தாரும்
சரணம் நம்பினேன்

9) தன்யாசி
நன்றி செலுத்துவாயே
ஓகோ இயேசுவின்
எத்தனை திரள் என்
காலத்தின் அருமையை
அருட்கடலே வந்தரவிது

10) கமாஸ்
ஏசுநாயகனைத் துதி செய்
செய்ய வேண்டியதை சீக்கிரம் செய்

கமாஸ்
அந்த நாள் பாக்கியநான்
தேவ லோகமதில்

கமாஸ்
சித்தம் கலங்காதே பிள்ளையே
நிச்சயம் செய்குவோம்

11) முகாரி
ஐயையா நான் பாவி
ஐயையா நான் வந்தேன்
எது வேண்டும் சொல் நேசனே
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்

12) காபி
வையகந்தன்னை நடுத்தீர்க்க ஏசு வல்லவர்
சொல்லாரும் மெய்ஞானரே, மேன்மை
பிரபுவே
பொன்னகர் பயணம் போகும்

காபி
வையகந்தன்னை நடுத்தீர்க்க ஆவியை அருளுமே ஸ்வாமி
ஏற்றுக் கொண்டருளுமே தேவா
பரிசுத்தாவி நீர் வாரும்
பொன்னகர் பயணம் போகும்

13) உசேனி
வந்து நல்வரம் தந்தனுப்பையா ஏசு
பாவியாய் எனை மேவிப்பார் ஐயா

உசேனி
வேறு ஜென்மம் வேணும்
பாதம் ஒன்றே வேணும்
நித்தம் முயல் மனமே

14) யமுனா கல்யாணி
பவனி செல்கிறார் ராஜா
ஆசையாகினேன் கோவே

15) கரஹரப்பிரியா
வரவேணும் எனதரசே
வரவேணும் பரனாவியே

16) மோகனக கல்யாணி
மேசியா ஏகநாயனார்
ஜீவ யேசு கிருபாசனா
என்னையும் உமதாட்டின்
ஓய்வு நாள் இது மனமே தேவனின்

17) மோகனம்
ஆண்டவனே கிருபை கூறாய்
சருவேசுரா ஏழைப்பாவி
உந்தன் திருப்பணியை

மோகனம்
தெய்வன்பின் வெள்ளமே
சாலேமின் ராஜா

18) யதுகுல காம்போதி
ஏசுவையே துதி செய்
கிருபை புரிந்தெனையாள்

19) சூரியகாந்தம்
துதி தங்கிய பரமண்டல
விசுவாசியின் காதில் பட
குணம் இங்கித வடிவாய்

20) செஞ்சுருட்டி
ஆர் இவர் ஆரோ
இயேசு நேசிக்கிறார்

21) பைரவி
தோத்திரம் செய்வேனே
வேளை இது சபையே
ஆ இன்பக் காலமல்லோ
பொக்கிஷம் சேர்த்திடுங்கள்

22) கேதார கௌளம்
பணிந்து நடந்து கொண்டாரே
புண்ணியன் இவர் யாரோ
புத்தியாய் நடந்த வாருங்கள்
ஜீவ வசனங் கூறுவோம்
ஆறுதல் அடை மனமே
தேவா இரக்கம் இல்லையோ

23) சஹானா
அருமையுற நீ இறங்கி
இன்னிய முகமலர்ந்து
தந்தையே இவர்க்கு மன்னி

சஹானா
இயேசுவின் ஒதுக்கில நான்
ஒருபோதும் மறவாத

சஹானா
உனக்கு ஒத்தாசை வரும் நல்ல
இந்த குழந்தையை

24) மணிரங்கு
தீய மனதை மாற்ற
இரங்கும் இரங்கும்
அறுப்போ மிகுதி
தருணம் ஈதுன் காட்சி சால
வாரும் எமது வறுமை

25) அமிர்த கல்யாணி
எத்தனை நாவால் துதிப்பேன்
ஆவியை மழை போலே

Angels from just call me angel gif Pictures, Images and Photos