கீர்த்தனை ஆசிரியர்களுக்கு ஆண்டவர் அளவற்ற ஞானத்தைக் கொடுத்திருப்பதை அவர்களின் கீர்த்தனை ஒன்றை எடுத்து ஆராயும்போது நாம் அறியலாம்.
இன்றைக்கு ஏறக்குறைய 175 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம்,
கரம்பகுடி லுத்தரன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் சு.முத்துசாமி.
அவரது அண்ணன் மகள் பொன்னுத்தாய் ஒரு பக்தியுள்ள பெண்மணி. மாலைவேளைகளில்
தனது வேதாகமத்தை எடுத்துகொண்டு, பக்கத்து வீட்டு பெண்களுக்கு வாசித்து, ஜெபித்து
வருவதே அவருடைய பணி.
நீண்டகாலம் திருமணமாகாத அந்த சகோதரிக்கு, 45 வயதில் திருமணமாகி 50 வயது
நெருங்கும்போது ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இந்த சகோதரியின்
வேதனைக்கு நாம் எதனை ஒப்பிடுவோம்?
"ஆண்டவருக்காக ஊழியம் செய்து வரும் எனக்கு, ஆண்டவர் ஏன் இந்தத் தண்டனையைக் கொடுத்தார்? நான் என்ன பாவம் செய்தேன்? என் மகள் சென்ற இடத்திற்கு நானும் செல்கிறேன்" என்று கூறி ஓர் அறையில் புகுந்து கதவைத் தாழிட்டுக்கொண்டார்கள் அந்த மாதரசி. ஒரு நாள் அல்ல; இரண்டு நாள் அல்ல. ஐந்து நாள் வரைக்கும் யார் கதவைத் தட்டினாலும் திறக்கவில்லை.
"வாதை உந்தன் கூடாரத்தை
அனுகாது மகளே - (டும்டும்)
பொல்லாப்பு நேரிடாது
தன்னே தானே தன்னானே தானே தானன்னன்னே" என்ற பாடலை
அந்த வேளையில் பாடலாமோ! கூடாது!
காரணம் வார்த்தைகளில் வேத வசனம் இருந்தாலும், ஆறுதல் தரும் வசனத்தின்
அடிப்படையில் இருந்தாலும் பொருத்தமற்ற ராகத்தேர்வு துன்பத்தைத் தனிப்பதற்க்குப்
பதிலாக பன்மடங்கு கூட்டிவிடும். இதுவே உண்மை!
பொன்னுத்தாய் அடைத்துக்கொண்டிருந்த அறைக்கு வெளியே நின்று, கல்லும் கரையும்படி
அவரது சித்தப்பா சு. முத்துசாமி ஆசிரியர் அவர்கள் சஹானாராகத்தில் பாடிய கீர்த்தனை
இதுதான்.
"ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க.
உனக்கென்ன குறை மகளே?
சிறுவந்தொட்டுனை யொரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை என்றென்றும்
உயிரோடிருப்பாருன்னை(ஒருபோதும்)"
எத்துணை அருமையான இராகத்தேர்வு! என்னே அவரது இசை ஞானம்!
தீப்புண்ணுக்கு மயில் இறகு கொண்டு தடவும்போது எத்தனை இதமாக இருக்குமோ
அதேபோன்று துன்பச்சூழ்நிலையில் உள்ளவருக்கு சஹானா இராகத்தில் அமைந்த இப்பாடல்
மிகவும் இதம் தரும். நமது கீர்த்தனை ஆசிரியர்கள் பாடலின் கருத்துக்கு மட்டும் இடம்
கொடுக்காமல், இரகத்தைத் தேர்வு செய்வதில் எவ்வளவு முயற்சி செய்து இருக்கிறார்கள் என்று பாருங்கள்.
மன உளைச்சலில் உள்ளவர்கள் ஒருமுறை இக்கீர்த்தனையைப் பாடிப் பாருங்கள், நீங்களே உணர்வீர்கள்.
உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமோ?
உறக்கமில்லாதவர் கண் உன்னைவிட்டோழியுமோ?
இந்நிலமீதினில் உனக்கென்ன வந்தாலும் சும்மா
இருக்குமா அவர் மனம்? உருக்கமில்லாது போமா? (ஒருபோதும்)
என்று பாடினார்.
இந்த வரிகளைப் பாடுகிறபொழுது, கதவு திறக்கப்பட்டது. வெளியே வந்த பொன்னுத்தாய்
முகம் கழுவி, வேதாகமத்தை எடுத்துக்கொண்டு, மீண்டும் ஊழியத்திற்குப் புறப்பட்டார்கள்.
இந்த அருமையான கீர்த்தனையை இசையோடு பாட ஒரு சில பெரியவர்களுக்கு மட்டுமே
தெரிகிறதே ஒழிய, இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும்அநேகமாகத் தெரியவில்லை.
பணத்திற்காக தன் தாலந்துகளை விற்கும் கிறிஸ்தவ ஊழியர்களின் பாட்டில் மயங்கி
உள்ளனர். இதற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். ஆண்டவர் தாமே இந்த அருமையான
கீர்த்தனைகளை, அனைத்து இளைஞர்களும் கற்றுக்கொள்ள ஏவுவாராக. ஆமென்.
கௌரவ உதவிகுரு. அருள்திரு. S.S.P.M ஹரன்
TELC கூடல் நகர், மதுரை - 625018.
Cell:9842194671

”ஒரு போதும் மறவாத உண்மைப் பிதா” பாடல் அறிந்தவர்க்கு மிகவும உற்சாகத்தை தேவையான நேரங்களில் அளிக்கவல்லது. இப்பாடலுள் பொதிந்திருக்கும் தேவ வார்த்தைகள் மனதில் உணரப்படும்போது எந்தக் கவலையும் பறந்துவிடும். நான் ஒரு நோயினால் நீண்ட காலம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தபோது வீட்டாரே ஏளனம் செய்தனர். அப்போது இந்தப் பாடலையே நான் அடிக்கடி படித்து ஆறுதலடைவதுண்டு.
ReplyDeleteஉன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமோ
உறக்கம் இல்லாதவர்கண் உன்னை விட்டொழியுமோ
Arputha raj said...
ReplyDelete//”ஒரு போதும் மறவாத உண்மைப் பிதா” பாடல் அறிந்தவர்க்கு மிகவும உற்சாகத்தை தேவையான நேரங்களில் அளிக்கவல்லது. இப்பாடலுள் பொதிந்திருக்கும் தேவ வார்த்தைகள் மனதில் உணரப்படும்போது எந்தக் கவலையும் பறந்துவிடும். நான் ஒரு நோயினால் நீண்ட காலம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தபோது வீட்டாரே ஏளனம் செய்தனர். அப்போது இந்தப் பாடலையே நான் அடிக்கடி படித்து ஆறுதலடைவதுண்டு.
உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமோ
உறக்கம் இல்லாதவர்கண் உன்னை விட்டொழியுமோ//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே.